Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

By: Nagaraj Mon, 28 Sept 2020 12:14:23 PM

வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஒப்புதல் அளித்தார்... பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று ஒப்புதல் அளித்து உள்ளார்.

பார்லிமென்டில், மூன்று வேளாண் திருத்த மசோதாக்கள், சமீபத்தில் நிறைவேற்றப்பட்டன. 'விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தடையின்றி எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்வதற்கு, இந்த மசோதா வழி வகுக்கும்' என, மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

presidential approval,agriculture bill,law,amul ,ஜனாதிபதி ஒப்புதல், வேளாண் மசோதா, சட்டம், அமுல்

இந்த மசோதாக்கள், பார்லிமென்ட் விதிமுறைகளை மீறி நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறி, இவற்றுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக்கூடாது என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த மசோதாக்களை எதிர்த்து, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இருந்து, பஞ்சாபின் சிரோன்மணி அகாலி தளம் கட்சி விலகியது.

இந்நிலையில், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் திருத்த மசோதாக்களுக்கும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டு, அமுலுக்கு வந்துள்ளன.

Tags :
|