Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரக்‌ஷாபந்தன் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

ரக்‌ஷாபந்தன் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

By: Karunakaran Mon, 03 Aug 2020 1:42:59 PM

ரக்‌ஷாபந்தன் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

இன்று நாடு முழுவதும் ரக்‌ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படும். ரக்‌ஷாபந்தன் பண்டிகை நாளில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கும், சகோதரர்களாக கருதுவோருக்கும் அவர்களது மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவர்.

இந்தியாவில் வட மாநிலங்களில் இந்த பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது தென் மாநிலங்களிலும் இந்த பண்டிகை பிரபலம் அடைந்து வருகிறது. இந்நிலையில் இந்த பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

indian president,ramnath govind,rakshabandhan congrats ,இந்திய ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், ராக்ஷாபந்தன், வாழ்த்து

இதுகுறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில், பெண்களின் மரியாதைக்கும், கண்ணியத்துக்கும் அனைவரும் ஆதரவாய் நிற்க வேண்டும். இதனால் அவர்கள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் ரக்‌ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த பண்டிகை அன்பு மற்றும் பாசத்தினால் சகோதர, சகோதரிகளை ஒன்றிணைக்க மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags :