Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை அவசர கால சட்டம் காலாவதியாகும் நிலை .. மீண்டும் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை .. அதிபர் ரணில் விக்ரசிங்கே

இலங்கை அவசர கால சட்டம் காலாவதியாகும் நிலை .. மீண்டும் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை .. அதிபர் ரணில் விக்ரசிங்கே

By: vaithegi Wed, 17 Aug 2022 1:16:12 PM

இலங்கை அவசர கால சட்டம் காலாவதியாகும் நிலை ..  மீண்டும் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை ..  அதிபர் ரணில் விக்ரசிங்கே

இலங்கை: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பெரும் கொந்தளிப்புக்கு உள்ளான மக்கள் மிகப்பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை என அனைத்தையும் சூறையாடிய அவர்கள், அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தனர். எனினும் பின்னர் அந்த கட்டிடங்களில் இருந்து படிப்படியாக அவர்கள் வெளியேறினர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளி நாட்டுக்கு தப்பி ஓடி சென்றார்.

இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 21-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அடுத்து அவருக்கும் பெரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து இலங்கையில் அவசர நிலையை பிரகடனப் படுத்துவதாக ரணில் விக்ரம சிங்கே அறிவித்தார்.

president ranil wickremesinghe,emergency law,sri lanka ,அதிபர் ரணில் விக்ரசிங்கே , அவசர கால சட்டம்,இலங்கை

இதற்கிடையே ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்த அவசர நிலை நாளையுடன் காலாவதியாகிறது. இந்நிலையில் அவசர நிலை வாபஸ் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிபர் அலுவலகம் தரப்பில் கூறியதாவது:- நாட்டின் நிலைமை நிலையான வகையில் இருப்பதால் அரசுக்கு எதிராக போராட்டங்களை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அவசரகால சட்டம் நீட்டிக்கப்படமாட்டாது.

இந்த வாரத்தில் அவசர கால சட்டம் காலாவதி யாகும் நிலையில் மீண்டும் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை எனஅவர் தெரிவித்துள்ளது. அதிபர் ரணில் விக்ரசிங்கே அவசர கால சட்டம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும். தற்போது நாடு, ஸ்திரமான நிலையில் இருப்பதால் அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசிய மில்லை எனவும் கூறினார்.

Tags :