Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்கர்கள் அனைவரும் மாஸ்க் அணிய தனது நிர்வாகம் வலியுறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கர்கள் அனைவரும் மாஸ்க் அணிய தனது நிர்வாகம் வலியுறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு

By: Karunakaran Fri, 14 Aug 2020 12:05:22 PM

அமெரிக்கர்கள் அனைவரும் மாஸ்க் அணிய தனது நிர்வாகம் வலியுறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைவரும் மாஸ்க் அணிதல் முக்கிய ஒன்றாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பல நாடுகள் மக்கள் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. அமெரிக்கர்கள் மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும் என அதிபர் டிரம்ப் கூறினாலும், அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

president trump,administration urges,american,mask ,ஜனாதிபதி டிரம்ப், நிர்வாகம் வலியுறுத்தல், அமெரிக்கர்கள், மாஸ்க்

மாஸ்க் அணிய உத்தரவிடும் உரிமை மாகாண கவர்னர்களிடம் உள்ளதாக டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்ததால், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படாமல் உள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று பேட்டி அளித்தபோது, அமெரிக்கர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என எனது நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. மாஸ்க் அணிவது தேசப்பற்று மிக்க செயல். மாஸ்க் அணிவது மிகவும் நன்றாக இருக்கலாம், நன்றாக இருக்கலாம், அல்லது நன்றாக இல்லாமல் கூட இருக்கலாம். இதனால் நீங்கள் இழக்கப்போவது என்ன?. ஆனால், மீண்டும் கூறுகிறேன் மாஸ்க் அணிய உத்தரவிடுவது தொடர்பான முடிவுகளை கவர்னர்களை தான் எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags :