Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு

எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு

By: Karunakaran Sat, 05 Sept 2020 09:09:11 AM

எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த ஜூன் மதம் சீனா ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலுக்கு பின் எல்லையில் பதற்றம் நிலவியது. இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. பதற்றத்தை தணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின் படைகளை விலக்கி கொள்ள இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்நிலையில் மீண்டும் சீனா எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. கடந்த 1962- ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா - சீனா இடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

president trump,border issue,india,china ,அதிபர் டிரம்ப், எல்லை பிரச்சினை, இந்தியா, சீனா

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேட்டி அளித்தபோது, இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது. சீனர்கள் எல்லைப் பிரச்சினையில் மிகவும் வலுவாக செல்கின்றனர். சீனா - இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினையில் உதவ தயாராக இருக்கிறோம். இருநாடுகளிடமும் இது பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம் என்று கூறினார்.

மேலும் அவரிடம், இந்தியாவிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு டிரம்ப் பதிலளிக்கையில், இல்லை என்று நம்புகிறேன். ஆனால், ஆனால் அவர்கள் நிச்சயமாக அதற்கு போகிறார்கள். நிறைய பேர் புரிந்துகொள்வதை விட அவர்கள் மிகவும் வலுவாக செல்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Tags :
|