Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்கள் அனுப்பப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அதிபர் டிரம்ப்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்கள் அனுப்பப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அதிபர் டிரம்ப்

By: Nagaraj Mon, 25 May 2020 11:02:45 AM

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்கள் அனுப்பப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அதிபர் டிரம்ப்

அதிபர் டிரம்ப் பங்கேற்கிறார்... அமெரிக்காவில் இருந்து, நாளை மறுநாள், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு, நாசா வீரர்கள் அனுப்பப்படுகின்றனர். இதற்கான விண்கலம் ஏவப்படும் நிகழ்ச்சியில், அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்கிறார்.

அமெரிக்காவில் இருந்து நேரடியாக விண்வெளி வீரர்கள், விண்கலத்தில் அனுப்பப்படுவது, 2011ம் ஆண்டுக்கு பின் நிறுத்தப்பட்டது. தற்போது, 10 ஆண்டுகளுக்கு பின், அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் உள்ள, கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, நாளை மறுநாள் விண்கலம் ஏவப்படுகிறது.


astronauts,players,president trump,attends tomorrow,tomorrow ,விண்வெளி, வீரர்கள், அதிபர் டிரம்ப், நாளை மறுநாள், பங்கேற்கிறார்

இந்த விண்கலத்தை நாசா சார்பில், தனியார் நிறுவனம் ஏவுகிறது என்பது கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் நடைபெற உள்ளது. நாசாவின் உதவியுடன், வணிக ரீதியில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பணிகளை, எலன் மஸ்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்' என்ற, தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது.

இந்நிறுவனம் சார்பில், 'ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9' விண்கலத்தில், நாசாவின் பயிற்சி விமானிகள், டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோர், விண்வெளியின் சர்வதேச ஆய்வு மையம் செல்கின்றனர். இந்த விண்கலம், ஏற்கனவே நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பிய, அதே ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படுகிறது.

Tags :