Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிபர் டிரம்பிற்கு காய்ச்சல் போன்ற கொரோனா வைரஸ் அறிகுறிகள் எதுவும் இல்லை - வெள்ளைமாளிகை தகவல்

அதிபர் டிரம்பிற்கு காய்ச்சல் போன்ற கொரோனா வைரஸ் அறிகுறிகள் எதுவும் இல்லை - வெள்ளைமாளிகை தகவல்

By: Karunakaran Thu, 08 Oct 2020 3:31:37 PM

அதிபர் டிரம்பிற்கு காய்ச்சல் போன்ற கொரோனா வைரஸ் அறிகுறிகள் எதுவும் இல்லை - வெள்ளைமாளிகை தகவல்

அமெரிக்கா அதிபரின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்பும், அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கடந்த 2-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா ஆகிய இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்பின், இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் வெள்ளைமாளிகையில் இருந்த டொனால்டு டிரம்பிற்கு லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததையடுத்து, கடந்த 3-ம் தேதி மேல் சிகிச்சைக்காக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதிக்கப்பட்டார்.

president trump,symptoms,corona virus,white house ,அதிபர் டிரம்ப், அறிகுறிகள், கொரோனா வைரஸ், வெள்ளை மாளிகை

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டப்பின் அதிபர் டிரம்ப் தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்தை எடுத்து வந்தார். 3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டிரம்ப் கடந்த 6-ம் தேதி வால்டர் ரேட் ராணுவ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் வெள்ளைமாளிகையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அதிபர் டிரம்பின் உடல்நிலை தொடர்பான தகவல்களை வெள்ளைமாளிகை நேற்று வெளியிட்டது. அதில், அதிபர் டிரம்பிற்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் உள்பட எந்த ஒரு கொரோனா அறிகுறியும் இல்லை. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் டிரம்பிற்கு ஆக்சிஜன் உதவிகள் அளிக்கப்படவில்லை. அதற்கான தேவையும் ஏற்படவில்லை. மேலும், அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் டொனால்டு டிரம்ப் தற்போதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையவில்லை.

Tags :