Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தேசியக்கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட அதிபர் டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தேசியக்கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட அதிபர் டிரம்ப் உத்தரவு

By: Monisha Fri, 22 May 2020 4:03:54 PM

அமெரிக்காவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தேசியக்கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட அதிபர் டிரம்ப் உத்தரவு

சீனாவில் உகான் நகரில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் தன் கட்டுக்குள் வைத்துள்ளது. இதனால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

உலக வல்லரசான அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. அங்கு 16.2 லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை விரைவில் ஒரு லட்சத்தை எட்டும் என அஞ்சப்படுகிறது.

america,the flag,coronavirus,the fatalities,president trump ,அமெரிக்கா,தேசியக்கொடி,கொரோனா வைரஸ்,பெரும் உயிரிழப்புகள்,அதிபர் டிரம்ப்

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்த அமெரிக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தேசியக்கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

‘கொரோனா வைரசால் உயிரிழந்த அமெரிக்கர்களின் நினைவாக அடுத்த மூன்று நாட்களில் அனைத்து மத்திய அரசு அலுவலக கட்டிடங்கள், தேசிய நினைவுச் சின்னங்களில் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி உத்தரவிட்டுள்ளேன். மேலும் நாட்டிற்கு சேவை செய்து உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவு நாளையொட்டி அவர்களை கவுரவிக்கும் வகையில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்’ என டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags :