Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமற்றவர் - ஜான் போல்டன்

ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமற்றவர் - ஜான் போல்டன்

By: Karunakaran Fri, 19 June 2020 11:03:27 AM

ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமற்றவர் - ஜான் போல்டன்

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ' அது நடந்த அறை - ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள்' என்ற தலைப்பிலான புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் அடுத்த வாரம் ஜூன் 23-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. அதற்கு முன்பாக இந்த புத்தகம் ஒரு புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த புத்தகத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தனிப்பட்ட முறையில் 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

donald trump,america president,john bolton,us presidential election ,ஜான் போல்டன்,டிரம்ப், அமெரிக்க அதிபர்,அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜான் போல்டன் கலந்துகொண்டபோது, டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமானவர் தானா? என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அப்போது அவர், டிரம்ப் அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமானவர் என்று நான் நினைக்கவில்லை. அதிபர் வேலைகளை செய்யக்கூடிய திறமை அவரிடம் இருக்கும் எனவும் நான் கருதவில்லை என்று பதிலளித்துள்ளார்.

மேலும் அவர், டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்வாக எவை மறு தேர்தலுக்கு என்ன நல்லது என்பதை தவிர வேறு எந்த வழிகாட்டு கொள்கைகளையும் அங்கு என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. டிரம்ப் தான் மீண்டும் அதிபர் ஆக வேண்டும் என்பதிலேயே மிகவும் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags :