Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்களை திறக்க ஜனாதிபதி டிரம்ப் ஆர்வம்

அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்களை திறக்க ஜனாதிபதி டிரம்ப் ஆர்வம்

By: Karunakaran Fri, 14 Aug 2020 10:06:08 AM

அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்களை திறக்க ஜனாதிபதி டிரம்ப் ஆர்வம்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள உகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டது. பல நாடுகளில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை.

president trump,open schools,corona spread,united states ,ஜனாதிபதி டிரம்ப், பள்ளிகள் திறப்பு, கொரோனா பரவல், அமெரிக்கா

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்களை திறப்பதில் ஜனாதிபதி டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். மாணவ, மாணவிகள் அணிந்து கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு 12½ கோடி முக கவசங்களை அனுப்பி வைப்போம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், நோய் கட்டுப்பாடு மற்றம் தடுப்பு மையங்களில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு நிபுணர் குழுக்களையும் அனுப்பி வைக்க தயார் எனவும், பள்ளிக்கூடங்களை பாதுகாப்பாக திறப்பதற்காக தான் இந்த நடவடிக்கையை எடுப்பதாக அதிபர் டிரம்ப் கூறினார்.

Tags :