Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனாதிபதி டிரம்ப் நாட்டிற்கு ஏற்ற தலைவர் அல்ல; மிஷெல் ஒபாமா குற்றச்சாட்டு

ஜனாதிபதி டிரம்ப் நாட்டிற்கு ஏற்ற தலைவர் அல்ல; மிஷெல் ஒபாமா குற்றச்சாட்டு

By: Nagaraj Tue, 18 Aug 2020 7:29:10 PM

ஜனாதிபதி டிரம்ப் நாட்டிற்கு ஏற்ற தலைவர் அல்ல; மிஷெல் ஒபாமா குற்றச்சாட்டு

நாட்டிற்கு ஏற்ற தலைவர் அல்ல... அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டிற்கு ஏற்ற தலைவர் அல்லர் என முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் மூன்றாம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பாக அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடும் அதேவேளை, ஜனநாயகக் கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனநாயக கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்ட மிஷெல் ஒபாமா, ஜோ பிடனை ஆதரித்துப் பேசினார். இதன்போதே டொனால்ட் ட்ரம்பை இவ்வாறு விமர்சித்துள்ளார்.

michelle,democrat,president trump,politics ,மிஷெல், ஜனநாயக கட்சி, அதிபர் டிரம்ப், அரசியல்

குறித்த மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த அவர், அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தனது செயற்பாடுகளை நிரூபிக்க போதுமான கால அவகாசம் இருந்த போதும் அவர் அதனை சரிவர நிறைவேற்றவில்லை. மேலும், எங்களுக்கானவராக நாம் தேடும் ஓர் நபராக அவரால் இருக்கவே முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனநாயக கட்சியின் மாநாட்டில் மிஷெல் ஒபாமா உரை நிகழ்த்தியமை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, ‘அவர் அரசியலை வெறுப்பவர்’. இந்த பொது இந்நிகழ்வின் முதல் நாள் இரவில், மிகப்பெரிய அரசியல் மற்றும் தனிநபர் சார்ந்த உரையினை மிஷெல் நிகழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags :