Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவுக்கு புதிய பெயர் சூட்டிய அதிபர் டிரம்ப்; சர்ச்சையை கிளப்பியது

கொரோனாவுக்கு புதிய பெயர் சூட்டிய அதிபர் டிரம்ப்; சர்ச்சையை கிளப்பியது

By: Nagaraj Sun, 21 June 2020 3:35:36 PM

கொரோனாவுக்கு புதிய பெயர் சூட்டிய அதிபர் டிரம்ப்; சர்ச்சையை கிளப்பியது

கொரோனா குறித்த ட்ரம்ப் விமர்சனம்... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸை 'Kung flu' என கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹானில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் வளர்ந்த நாடான அமெரிக்கா அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பற்றிய உண்மையான தகவல்களை சீனா மறைத்து விட்டதாக அதிபர் ட்ரம்ப் தொடக்கம் முதலே குற்றஞ்சாட்டி வருகிறார். கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அமெரிக்கா அந்த அமைப்பில் இருந்து விலகியது.

controversy,corona,president trump,world health organization ,சர்ச்சை, கொரோனா, அதிபர் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பு

சீன ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக ட்ரம்ப் கூறிய நிலையில், விலங்குகளில் இருந்துதான் வைரஸ் பரவியது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

ட்ரம்ப் கொரோனா வைரஸை 'சீன வைரஸ்' மற்றும் 'wuhan வைரஸ்' என கூறி வந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிரான இனவெறி மற்றும் வன்முறைக்கு வழிவகுக்கும் என பலரும் கூறினர். இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ட்ரம்ப், மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது, 'வரலாற்றில் மற்ற நோய்களை விட கோவிட்-19 நோய்க்குதான் அதிகமான பெயர்கள் உள்ளன. நான் இதற்கு 'Kung flu' என பெயரிட முடியும். என்னால் இதற்கு 19 வெவ்வேறு பெயர்களை சூட்ட முடியும்' என கூறியுள்ளார்.

முன்னதாக, இது இனவெறி இல்லை என்றும், கொரோனா சீனாவில் இருந்துதான் பரவியுள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனா வைரஸை சீனாவுடன் இணைக்கும் எந்த வார்த்தையையும் பயன்படுத்தக் கூடாது என உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. அதிபர் ட்ரம்ப் இதுபோன்ற வார்த்தைகளை உபயோகித்து வருவது சீன மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|