Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜோ பிடனின் விமர்சனத்திற்கு நச்சென்று பதில் கூறிய அதிபர் ட்ரம்ப்!

ஜோ பிடனின் விமர்சனத்திற்கு நச்சென்று பதில் கூறிய அதிபர் ட்ரம்ப்!

By: Monisha Mon, 15 June 2020 1:40:49 PM

ஜோ பிடனின் விமர்சனத்திற்கு நச்சென்று பதில் கூறிய அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் உச்சக்கட்ட நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தல் குறித்து குடியரசு கட்சி, ஜனநாயக கட்சியினருக்கு இடையே பெரிய வாக்குவாதங்கள், வார்த்தைப் போர்கள் நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சியின் வேட்பளாராக அதிபர் ட்ரம்ப் நிற்கிறார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் துணை அதிபராக பதவி வகித்த ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஒருபுறம், இன்னொரு புறம் இனவெறிக்கு எதிராகப் போராட்டங்கள். இரு நெருக்கடியில் சிக்கி இருக்கும் அமெரிக்காவில் தற்போது அதிபர் ட்ரம்ப்பின் செல்வாக்கு சரிந்து வருவதாகவும், தேர்தலில் அதிபர் ட்ரம்ப் தோல்வியைச் சந்திப்பார் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

america,president election,donald trump,joe biden,criticism ,அமெரிக்கா,அதிபர் தேர்தல்,டொனால்ட் ட்ரம்ப்,ஜோ பிடன்,விமர்சனம்

இந்நிலையில் ஜோ பிடன் ஒரு பேட்டியின் போது, ஒருவேளை ட்ரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து விட்டாலும் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார். வெள்ளை மாளிகை விட்டு வெளியேற அடம்பிடிப்பார் என்று கருத்துத் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவரை அதிகாரிகளைக் கொண்டே வெளியேற்ற வேண்டி வரும் எனவும் குறிப்பிட்டு பேசினார்.

ஜோ பிடனின் விமர்சனம் குறித்து அதிபர் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ட்ரம்ப் கூறியதாவது:- நான் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து விட்டால் அமைதியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன். எனக்கு செய்வதற்கு நிறைய வேலை இருக்கிறது. அதைப் பார்க்க போய்விடுவேன். ஆனால் நான் தோல்வியடைந்தால் இந்த நாட்டிற்கு அது பெரிய ஆபத்தாக முடியும். எனக் கூறியுள்ளார்.

Tags :