Advertisement

ஒபாமாவுக்கு பதிலடி கொடுத்த அதிபர் டிரம்ப்

By: Nagaraj Fri, 21 Aug 2020 11:31:50 AM

ஒபாமாவுக்கு பதிலடி கொடுத்த அதிபர் டிரம்ப்

''முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சிறப்பாக பணியாற்றாததால், நான் அதிபராக தேர்வானேன்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

வாஷிங்டனில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

அரசியலில் ஈடுபடுவதற்கு முன், என் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்தேன். எனக்கு முன் இருந்த அதிபர் பராக் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடன், தங்களது பணிகளை சிறப்பாக செய்யவில்லை. இதனால் அரசியலில் குதித்தேன். அதிபராக தேர்வாகி உங்கள் முன் நிற்கிறேன்.

retaliation,obama,jobidan,president trump,fun ,பதிலடி, ஒபாமா, ஜோபிடன், அதிபர் டிரம்ப், வேடிக்கை

ஆனால், நான் சிறப்பாக பணியாற்றவில்லை என ஒபாமா கூறுவது, சரியான வேடிக்கை. இவ்வாறு, டிரம்ப் கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடக்கிறது. இதில், குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்பை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிபர் டிரம்ப் சரியான பணிகளை செய்யாததால் அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது என்று ஒபாமா விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|