Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் அதிபர் டிரம்ப் இன்று டிஸ்சார்ஜ்

உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் அதிபர் டிரம்ப் இன்று டிஸ்சார்ஜ்

By: Nagaraj Mon, 05 Oct 2020 2:40:30 PM

உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் அதிபர் டிரம்ப் இன்று டிஸ்சார்ஜ்

இன்று டிஸ்சார்ஜ்... அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை அன்று ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இருந்தாலும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

discharge,medical committee,president trump,treatment,corona ,டிஸ்சார்ஜ், மருத்துவக்குழு, அதிபர் ட்ரம்ப், சிகிச்சை, கொரோனா

ஆனால், வெள்ளியன்று டிரம்பின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. காய்ச்சலுடன், ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவும் வேகமாக குறைந்ததாலும் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக, வெள்ளை மாளிகைப் பணியாளர் தலைவர் மார்க் மெடோஸ் தெரிவித்தார்.

வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ட்ரம்புக்கு ரெமிடெசிவிர் மருந்து கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மிக வேகமாக ட்ரம்பின் உடல்நிலை சீரடைந்ததாக மருத்துவக்குழு தெரிவித்தது. இதனிடையே, மருத்துவமனை வளாகத்தில் குவிந்த தனது ஆதரவாளர்களை காண ட்ரம்ப் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது, காரில் இருந்தவாறே சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த ட்ரம்ப், தனகாக பிரார்த்தனை செய்தவர்களுக்காக கைகளை தட்டி நன்றி தெரிவித்தார்.

அதிபர் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோபிடன் உடனான, நேருக்கு நேர் தேர்தல் விவாதத்தில் பங்கேற்க தான் தயாராக இருப்பதை காட்டும் விதமாக ட்ரம்ப் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. சிகிச்சைக்கும் பிறகு, ட்ரம்ப் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இன்று வெள்ளை மாளிகைக்கு திரும்புவார் என, அதிபருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

Tags :