Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைன் பாதுகாப்பு மந்திரியை பதவி நீக்கம் செய்கிறாரா அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் பாதுகாப்பு மந்திரியை பதவி நீக்கம் செய்கிறாரா அதிபர் ஜெலன்ஸ்கி

By: Nagaraj Tue, 05 Sept 2023 07:05:45 AM

உக்ரைன் பாதுகாப்பு மந்திரியை பதவி நீக்கம் செய்கிறாரா அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன்: ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் பாதுகாப்பு மந்திரியை நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார். ரெஸ்னிகோவ் நீக்கப்படும் முடிவு அந்த நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. இது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவை அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார்.

அவருக்கு பதிலாக ருஸ்டெம் உமெரோவை நியமிக்குமாறு அவர் அறிவித்து உள்ளார். நாட்டு மக்களுக்கான காணொளி செய்தியில் இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள அதிபர் ஜெலென்ஸ்கி, பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவுக்குப் பதிலாக ருஸ்டெம் உமெ ரோவை நியமிக்க இந்த வாரம் நாடாளுமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

excitement,political circle,president of ukraine,military assistance,ministry of defense ,பரபரப்பு, அரசியல் வட்டாரம், உக்ரைன் அதிபர், ராணுவ உதவி, பாதுகாப்பு அமைச்சகம்

கடந்த 550 நாட்களுக்கும் மேலாக ரஷ்யாவுக்கு எதிரான போரை முழுமையாக முன்னெடுத்தவர் ரெஸ்னிகோவ் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பதிலாக ருஸ்டெம் உமெரோவை நியமிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்தே உக்ரைன் பாதுகாப்பு மந்திரியாக ரெஸ்னிகோவ் செயல்பட்டு வருகிறார்.

ரஷியாவுக்கு எதிரான போரின்போது மேற்கத்திய ராணுவ உதவியைப் பெற ரெஸ்னிகோவ் நடவடிக்கை மேற்கொண்டார். ரஷ்யா உக்ரைன் மீது தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொள்ளும் முக்கியமான நடவடிக்கை இது என கூறப்படுகிறது.

ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளது. போர் காலத்தில் ஊழல் முறை கேடுகளுக்கு இடமில்லை என அதிபர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்த நிலையில், ரெஸ்னிகோவ் நீக்கப்படும் முடிவு அந்த நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :