Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனாதிபதி தேர்தல் ..2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின

ஜனாதிபதி தேர்தல் ..2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின

By: vaithegi Thu, 21 July 2022 6:19:55 PM

ஜனாதிபதி தேர்தல் ..2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார் .

counting of votes,presidential election ,வாக்கு எண்ணிக்கை,ஜனாதிபதி தேர்தல்

மேலும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது.

இதை தொடர்ந்து இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணூம் பணியானது இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று கொண்டு வருகிறது. தற்போது 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது.அந்தவகையில் திரௌபதி முர்மு - 4,83,299 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா- 1,89,876 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இதனால் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.இருவருக்கும் 2,93,423 வாக்குகள் வித்தியாசம் உள்ளது.

Tags :