Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரெஞ்ச் பிரஜையிடம் அன்பாக பேசுவது போல் நடித்து பணம் மோசடி

பிரெஞ்ச் பிரஜையிடம் அன்பாக பேசுவது போல் நடித்து பணம் மோசடி

By: Nagaraj Mon, 10 Oct 2022 12:34:20 PM

பிரெஞ்ச் பிரஜையிடம் அன்பாக பேசுவது போல் நடித்து பணம் மோசடி

கனடா: வயோதிக தம்பதியினர் நபர் ஒருவரிடம் பாசமாக பேசி, மோசடி செய்த சமப்வமொன்று பதிவாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவாரில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.


பிரெஞ்சு பிரஜை ஒருவரையே இவ்வாறு இந்த தம்பதியினர் ஏமாற்றி பணம் பறித்துள்ளனர். நட்புறவு மற்றும் சட்ட ஆலோசனை என்ற பெயரில் பிரான்கோயிஸ் மில்லி என்ற நபரின் வாழ்நாள் சேமிப்பை இந்த வயோதிப தம்பதியினர் மோசடி செய்துள்ளனர்.

fraud,court,order,couple,affectionately spoken ,மோசடி, நீதிமன்றம், உத்தரவு, தம்பதி, பாசமாக பேசினர்

கடந்த 2009ம் ஆண்டில் கனடாவிற்கு குடியேறிய மில்லி, இந்த தம்பதியினருடன் நெருங்கிப் பழகியதுடன் அவர்கள் இருவரையும் தாய் தந்தை என்றே கருதி வந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மில்லி, சொத்து ஒன்றை விற்பனை செய்த போது ஏற்பட்ட சட்ட சிக்கலுக்கு ஆலோசனை வழங்குவதாகக் கூறி குறித்த நபரின் பணத்தை இந்த தம்பதியினர் அபகரித்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர், பாதிக்கப்பட்ட மில்லிக்கு 742000 டொலர்களை செலுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
|
|
|
|