Advertisement

குரங்கு அம்மை பரவலை தடுக்க தடுப்பு நடவடிக்கை

By: Nagaraj Thu, 30 June 2022 6:14:56 PM

குரங்கு அம்மை பரவலை தடுக்க தடுப்பு நடவடிக்கை

தென் ஆப்பிரிக்கா: தடுப்பு நடவடிக்கை... குரங்கு அம்மை பரவலை தடுக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயன்படுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்கா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவின் மேற்கு மாகாணத்தில் உள்ள கேப் டவுண் பகுதியில் வெளிநாட்டிற்கு செல்லாத ஒருவருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் சுகாரதார அமைச்சர் ஜோ பாஹ்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

treatment,ape,action,prevention,ports,passengers ,சிகிச்சை, குரங்கம்மை, நடவடிக்கை, தடுப்பு, துறைமுகங்கள், பயணிகள்

உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை பரவுவதை தடுப்பது தொடர்பாக பயண கட்டுப்பாடுகள் விதிக்க பரிந்துரைக்கவில்லை என்றாலும் உள்ளூர் நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு குரங்கு அம்மை வழக்குகளை கண்டறிதல் மற்றும் அவற்றை மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டுதலை வழங்குகின்றன.

கொரோனா தொற்று பரவலின் போது விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் பல அடுக்குகளில் சோதனை செய்தனர். இதில் பயணிகளின் வெப்பநிலையை பரிசோதித்தல், பயணிகளின் உடல்நிலை குறித்த கேள்விதாள்களை நிரப்புதல், அவற்றை பகுப்பாய்வு செய்தனர். இதன்மூலம் தொற்று பரவலை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்க உதவியது.

Tags :
|
|
|