Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருந்துகளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

மருந்துகளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

By: vaithegi Wed, 14 Sept 2022 12:22:44 PM

மருந்துகளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்தியா: மாறி வரும் பொருளாதார நிலைக்கு ஏற்ப அனைத்து பொருட்களின் விலையும் ஒவ்வொரு நாளும் உயர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் தங்கம் முதல் பெட்ரோல், டீசல் வரை அனைத்து பொருட்களின் விலை உச்சத்தை தொட்ட வகையில் தான் உள்ளது. இதில் அத்தியாவசிய மருந்துகளும் அடங்கும். இதனால் மக்கள் பலரும் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

இதை அடுத்து இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு, புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட மொத்தம் 34 வகை மருந்துகள் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த பட்டியல் முதன்முதலில் 1996 ஆண்டு வெளியிடப்பட்டது.

medicines,india ,மருந்துகள் ,இந்தியா

அதன் பின்னர் 2015 இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது மீண்டும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்பட 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த பட்டியலை வெளிியிட்டார். இவ்வாறு இந்த பட்டியலில் இந்த மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளதால் இம்மருந்துகளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :