Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவுக்கு அர்ச்சகர் பலி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவுக்கு அர்ச்சகர் பலி

By: Karunakaran Mon, 20 July 2020 2:00:59 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவுக்கு அர்ச்சகர் பலி

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அசுர வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் 50 அர்ச்சகர்களில் 15 பேர் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என மொத்தம் 170 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அதன்பின் கொரோனா பாதிப்புடைய 170 பேரும் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயங்காருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

tirupati ezhumalayan,corona virus,corona death,priest ,திருப்பதி ஏழுமலையான், கொரோனா வைரஸ், கொரோனா மரணம், பூசாரி

தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா பாதிப்புடைய முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 170 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், பக்தர்களுக்கான சாமி தரிசன அனுமதியை ரத்து செய்யலாமா? அல்லது தொடரலாமா? என ஆந்திர அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கொரோனா காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டதால், அங்கு வருமானம் குறைந்து போனது குறிப்பிடத்தக்கது.

Tags :