Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இஸ்ரேல் மீதான தாக்குதல் நடந்த இடங்களில் பிரதமர் ஆய்வு

இஸ்ரேல் மீதான தாக்குதல் நடந்த இடங்களில் பிரதமர் ஆய்வு

By: Nagaraj Wed, 23 Aug 2023 5:10:50 PM

இஸ்ரேல் மீதான தாக்குதல் நடந்த இடங்களில் பிரதமர் ஆய்வு

இஸ்ரேல்: இஸ்ரேல் மீதான தாக்குதல் பின்னணியில் ஈரான் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் பிரதமர் நெதன்யாகு ஆய்வு மேற்கொண்டார்.

அண்மையில் இஸ்ரேல் மீது பாலஸ்தீனர்கள் நடத்திய அனைத்து தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் அதிபர் பெஞ்ஞமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.

israel,attack background,study,prime minister netanyahu,iran ,இஸ்ரேல், தாக்குதல் பின்னணி, ஆய்வு, பிரதமர் நெதன்யாகு, ஈரான்

ஹெப்ரான் நகரில் இரண்டு இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

இந்த பகுதிக்கு வந்து ஆய்வில் ஈடுபட்ட பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக தெரிவித்தனர்.

Tags :
|
|