Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்கா - கனடா எல்லை கட்டுப்பாட்டை நீட்டிப்பு செய்து பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு

அமெரிக்கா - கனடா எல்லை கட்டுப்பாட்டை நீட்டிப்பு செய்து பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு

By: Nagaraj Thu, 21 May 2020 6:40:30 PM

அமெரிக்கா - கனடா எல்லை கட்டுப்பாட்டை நீட்டிப்பு செய்து பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு

எல்லை கட்டுப்பாடு நீட்டிப்பு... அமெரிக்கா- கனடாவுக்கிடையிலான எல்லை கட்டுப்பாடு மேலுமொரு மாதத்திற்கு நீடிக்கப்படுமென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

நடைமுறையில் உள்ள எல்லைக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளபோதும், அத்தியாவசிமற்ற பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமென பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது ஒரு முக்கியமான முடிவு, இது எங்கள் இரு நாடுகளிலும் உள்ள மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

unity,boundary,control,action,economic action ,ஒற்றுமை, எல்லை, கட்டுப்பாடு, நடவடிக்கை, பொருளாதார நடவடிக்கை

எடுக்கப்பட்ட முடிவுகள் முதல் வாரம் நெருக்கடியில் இருந்தன. நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது.

சமநிலையை சரியாக வைத்திருக்க சரியான நடவடிக்கைகளைப் பெற கனேடியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் சரிசெய்கிறோம், மேலும் நாம் அனைவரும் நம்பியுள்ள இயல்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் ஒற்றுமையை மீட்டெடுக்கிறோம்” என கூறினார்.

Tags :
|
|