Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லிக்கு புறப்பட்டுகிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லிக்கு புறப்பட்டுகிறார்

By: vaithegi Thu, 27 Apr 2023 09:45:34 AM

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லிக்கு புறப்பட்டுகிறார்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று, கடந்த 2021 ஜூன் 3-ஆம் தேதி, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

எனவே அதன்படி, தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.இதையடுத்து இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் - இரைப்பை,புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

delhi,m.k.stalin ,டெல்லி, மு.க.ஸ்டாலின்

இதையடுத்து கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் ரூ.230 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழக மக்களுக்கு மிக பயனுள்ளதாக அமையும். கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்கவுள்ளார்.

எனவே , முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். டெல்லியில் நாளை ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து, மருத்துவமனையை திறந்துவைக்க அழைப்பு விடுக்கிறார்.

Tags :
|