Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்

டெல்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்

By: vaithegi Wed, 17 Aug 2022 07:04:31 AM

டெல்லியில் இன்று  மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9.05 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் டெல்லி சென்றார். அதற்கு முன்னதாக தலைமைச்செயலாளர் இறையன்பு நேற்று மாலை 5.10 மணி விமானத்தில் டெல்லி புறப்பட்டார். மேலும் முதல்-அமைச்சரின் செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களும் டெல்லி சென்றுள்ளனர்.

இதனையடுத்து முதல்-அமைச்சர் நேற்று இரவு அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். அதன் பின் காலை 11.30 மணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள அவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திப்பது முதன்முறையாகும். பின் இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். இதையடுத்து இச்சந்திப்பின்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு நன்றி கூறுகிறார்.

m. k. stalin,prime minister narendra modi,delhi ,மு.க.ஸ்டாலின்,பிரதமர் நரேந்திர மோடி,டெல்லி

மேலும், தமிழக நலன் சார்ந்த நலத்திட்டங்களை செயல்படுத்துவதும் மற்றும் அதற்கு தேவையான கூடுதல் நிதி ஒதுக்குமாறு விரிவான மனுவையும் பிரதமரிடம் கொடுப்பார் என கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில சட்ட மசோதாக்களுக்கு கவர்னரிடம் இருந்து இன்னும் ஒப்புதல் வரவில்லை. நீட் விலக்கு சட்ட மசோதாவும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவு எடுக்க வலியுறுத்த வேண்டும் என பிரதமரிடம், மு.க.ஸ்டாலின் நேரில் எடுத்துரைப்பார் என தெரிகிறது.

எனவே இச்சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டெல்லியில் இந்த சந்திப்பை முடித்துவிட்டு மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு இரவு 10.40 மணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்.

Tags :