Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

By: Monisha Tue, 02 June 2020 1:11:50 PM

இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு, ‘வளர்ச்சியை மீண்டும் பெறுதல்’ என்ற தலைப்பில் துவக்க உரையாற்றினார். மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் 5 அம்சங்களை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

கொரோனா பாதிப்பால் ஆன்லைன் நிகழ்ச்சிகள் புதிய முயற்சியாக இருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும். அதே நேரத்தில் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும். கொரோனா வைரசை எதிர்த்து போராட, நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

தற்போது ‘வளர்ச்சியைத் மீண்டும் பெறுதல்’ என்ற நடவடிக்கையை சிஐஐ தொடங்கியுள்ளது. இதற்காக இந்தியத் தொழில்துறையினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

indian industry federation,pm modi,economy,online programs ,இந்திய தொழில் கூட்டமைப்பு,பிரதமர் மோடி,பொருளாதாரம்,ஆன்லைன் நிகழ்ச்சிகள்

இந்தியாவின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், இந்தியாவை சுயசார்பு நாடாக வளர்ச்சி பெறச் செய்வதற்கும், ‘நோக்கம், உள்ளடக்கம், முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் புதுமை’ ஆகிய ஐந்து விஷயங்கள் முக்கியமானவை. சமீபத்தில் நாம் எடுத்த தைரியமான முடிவுகளில் இவை பற்றிய ஒரு பார்வை உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் நமது சுரங்கத் துறை, எரிசக்தி துறை அல்லது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் எதுவாக இருந்தாலும், அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் ஒவ்வொரு துறையிலும் இளைஞர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் இருக்கும். ஏழைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.53,000 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம். விவசாயம், தொழில் செய்வோர், தொழில் முனைவோர், தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் விரைவில் மீளும். பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவது நமது முன்னுரிமைகளில் ஒன்று. இதற்காக அரசாங்கம் உடனடி முடிவுகளை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags :