Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு

இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு

By: vaithegi Mon, 06 Nov 2023 1:52:25 PM

இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியா : இந்தியாவில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டம் மூலமாக ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இத்திட்டம் இன்னும் 1 மாதத்தில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 80 கோடி மக்கள் பயன்பெற இருக்கின்றனர்.

prime minister modi,free ration scheme , பிரதமர் மோடி,இலவச ரேஷன் திட்டம்

கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம் மூலம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 (NFSA) இன் கீழ் தகுதியான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.

இதையடுத்து PMGKAY இந்த திட்டம் NFSA இன் கீழ் 2 வகையான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை உள்ளடக்கியது. அதாவது அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்பங்கள் (PHH) என்று மொத்தம் 81.35 கோடி பயனாளிகளை உள்ளடக்கியது.

Tags :