Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடி- சீன அதிபர் 3 கூட்டங்களில் சந்திக்கும் வாய்ப்பு

பிரதமர் மோடி- சீன அதிபர் 3 கூட்டங்களில் சந்திக்கும் வாய்ப்பு

By: Nagaraj Tue, 03 Nov 2020 09:03:45 AM

பிரதமர் மோடி- சீன அதிபர் 3 கூட்டங்களில் சந்திக்கும் வாய்ப்பு

சந்திக்கும் வாய்ப்பு... பிரதமர் மோடியும் சீன அதிபர் சின் பிங்கும் இம்மாதம் நடக்கும் வெவ்வேறு 3 கூட்டங்களில் சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்னையை தொடர்ந்து உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லடாக் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் மாநாடு வருகிற 10ம் தேதியும், பிரிக்ஸ் மாநாடு 17 ம் தேதியும், ஜி-20 மாநாடு 21,22 தேதிகளிலும் நடக்க உள்ளது.

negotiation,opportunity to meet,video,russia,india ,பேச்சுவார்த்தை, சந்திக்கும் வாய்ப்பு, காணொலி, ரஷ்யா, இந்தியா

இதில் முதல் இரு மாநாடுகளை ரஷ்யாவும், மூன்றாவது மாநாட்டை சவுதி அரேபியாவும் நடத்துகின்றன. இந்த 3 மாநாடுகளிலும் பிரதமர் மோடியும், சீன அதிபர் சி சின் பிங்கும் பங்கேற்க உள்ளனர்.

காணொளி மூலம் நடக்கும் இந்த மாநாடுகளின் போது இரு நாட்டு அதிபர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க வாய்ப்புள்ளது. ஆனால், இருவரும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
|
|