Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்காள நடிகர் சவுமித்திர சாட்டர்ஜியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

வங்காள நடிகர் சவுமித்திர சாட்டர்ஜியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

By: Karunakaran Sun, 15 Nov 2020 5:53:34 PM

வங்காள நடிகர் சவுமித்திர சாட்டர்ஜியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் வங்காள நடிகர் சவுமித்திர சாட்டர்ஜி இன்று காலமானார். கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, நரம்பியல் பாதிப்பு என அடுத்தடுத்த பாதிப்புகள் ஏற்பட்டதால், அவரது உடல்நிலை மோசமடைந்து.

செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று பிரிந்தது. பத்ம பூஷண், தாதாசாகேப் பால்கே விருது, சங்கீத நாடக அகாடமி விருது மற்றும் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர் சாட்டர்ஜி.

modi,condoles,bengali actor,chaumitra chatterjee ,மோடி, இரங்கல், பெங்காலி நடிகர், ச um மித்ரா சாட்டர்ஜி

இந்நிலையில், அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிப்பு கலைக்கு சாட்டர்ஜி மகத்தான பங்களிப்பை வழங்கியதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சவுமித்திரா சாட்டர்ஜியின் மரணம் சினிமா உலகம், மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் கலாச்சார வாழ்க்கைக்கு பெரும் இழப்பு என்றும், சாட்டர்ஜி தனது படைப்புகள் மூலம், வங்காள மக்களின் உணர்வுகள் மற்றும் நெறிமுறைகளை வெளிப்படுத்தியவர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

Tags :
|