Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூரி ரத யாத்திரை இன்று தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து

பூரி ரத யாத்திரை இன்று தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து

By: Karunakaran Tue, 23 June 2020 1:46:33 PM

பூரி ரத யாத்திரை இன்று தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து

ஒடிஷா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலில் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றதாகும். கொரோனா காரணமாக இந்த ரத யாத்திரை நடைபெற தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின் ரத யாத்திரை நடத்த கோரப்பட்ட மனுக்கள் விசாரணையில், கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, இந்த ரத யாத்திரை இன்று தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத யாத்திரையை கட்டுப்பாடுகளுடன் மக்கள் பங்கேற்பு இல்லாமல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

puri ratha yatra,jeganath,odisha,pm modi ,பூரி ரத யாத்திரை,பிரதமர் மோடி,ஜெகநாத்,ஒடிஷா

மத்திய அரசு விதிமுறைகளின் படி, இன்று தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி,ரத யாத்திரையை ஒட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பகவான் ஜெகந்நாதரின் ரத யாத்திரை நடைபெறும் புனிதமான இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், இந்த புனித நாள், மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்தை வழங்க பிரார்த்தனை செய்கிறேன். ஜெய் ஜெகந்நாத் என்று பதிவிட்டுள்ளார். ரத யாத்திரையில் இந்த ஆண்டு மக்கள் ரதத்தை இழுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|