Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷியாவின் அதிபராக 2036 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ரஷியாவின் அதிபராக 2036 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

By: Karunakaran Fri, 03 July 2020 09:24:54 AM

ரஷியாவின் அதிபராக 2036 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ரஷியாவின் அதிபராக விளாடிமிர் புதின் தற்போது உள்ளார். இவர் 2024 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளில் நடைபெறும் அதிபர் தேர்தல்களில் பங்கு பெற வகை செய்யும் அரசியலைமைப்பு திருத்தத்திற்கு மக்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 77 சதவிகிதம் ஆதரவு அவருக்கு கிடைத்தது.

இதன் மூலம் புதின் அடுத்த இரண்டு அதிபர் தேர்தல்களிலும் போட்டியிடலாம். 2030-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றால், அவர் 2036-ம் ஆண்டுவரை அதாவது தனது 83 வயது வரை ரஷியாவின் அதிபராக செயல்படுவார். அதிபர் தேர்தல்களில் பங்கு பெற வகை செய்யும் இந்த அரசியலைமைப்பு திருத்தத்திற்கு மக்கள் புதினுக்கு அதிகளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

russia,president,putin,modi ,ரஷ்யா, ஜனாதிபதி, புதின், மோடி

இந்நிலையில் தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் வகையிலான சட்டத்திருத்தத்தில் புதின் வெற்றி பெற்றதால், அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தொலைபேசி மூலம் ரஷிய அதிபரை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி தனது வாழ்த்தை கூறினார்.

பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நன்றி தெரிவித்தார். அதன்பின், இரு நாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
|
|