Advertisement

காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி கடும் விமர்சனம்

By: Nagaraj Tue, 21 Nov 2023 11:01:16 AM

காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி கடும் விமர்சனம்

பாலி: காங்கிரஸ் குறித்து விமர்சனம்... காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நாரிசக்தி வந்தன் மசோதா நிறைவேற்றப்பட்டதில் இருந்து காங்கிரஸ் கூட்டணியினர் பெண்களுக்கு எதிரான பிரசாரத்தை துவக்கிவிட்டதாக தெரிவித்தார்.

congress,real face,corruption,succession politics,pm modi,rajasthan ,காங்கிரஸ், நிஜ முகம், ஊழல், வாரிசு அரசியல், பிரதமர் மோடி, ராஜஸ்தான்

பீகார் முதலமைச்சரின் சமீபத்திய பேச்சை சுட்டிக்காட்டிய பிரதமர், தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் குறித்து ஆணவக் கூட்டணியின் தலைவர்கள் மிகுந்த ஆட்சேபகரமான கருத்துகளை கூறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இது தான் காங்கிரஸ் கூட்டணியின் நிஜ முகம் என்று தெரிவித்த பிரதமர், ஊழல் மற்றும் வாரிசு அரசியலை விட காங்கிரஸ் கட்சிக்கு வேறு முக்கிய விஷயங்கள் வேறு எதுவும் இல்லை என்றார்

Tags :