Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

By: Karunakaran Thu, 13 Aug 2020 1:42:53 PM

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கடந்த பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், வரி செலுத்துவோர் சாசனம் தொடங்கப்படும் என்று கூறினார். இது வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும். வரி செலுத்துவோருக்கு தொந்தரவுகளை குறைக்கும் என்று கூறினார்.

இந்நிலையில் நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு - நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் ஆகியோர் பங்கேற்றனர்.

indian prime minister,modi,honor,honest taxpayers ,இந்திய பிரதமர், மோடி, மரியாதை, நேர்மையான வரி செலுத்துவோர்

அப்போது பேசிய மோடி, உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள். இத்திட்டம் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும். மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்று சேருகின்றன. வரி விதிப்பில் செய்யப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரி செலுத்துவோர் அனைத்து துறைகளிலும் முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார்.

மேலும் இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திட்டம், நேரடி வரிகள் சீர்திருத்த பயணத்தை மேலும் முன்னெடுத்து செல்லும். சமீபகாலமாக நேரடி வரிகள் பிரிவில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரி சீர்திருத்தங்களின் நோக்கம், வரி குறைப்பு மற்றும் நேரடி வரி சட்டங்களை எளிமைப்படுத்துவது ஆகும். வருமான வரித்துறை செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும், செயல்திறனையும் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|