Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாமரை வடிவில் விமான நிலையம்... சிவமொக்காவில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

தாமரை வடிவில் விமான நிலையம்... சிவமொக்காவில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

By: Nagaraj Mon, 27 Feb 2023 7:03:05 PM

தாமரை வடிவில் விமான நிலையம்... சிவமொக்காவில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ரூ.384 கோடி செலவில் 775 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் தாமரை வடிவில் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இரவு விமானங்கள் தரையிறங்கும் வசதியுடன் 3,200 மீட்டர் தொலைவில் ஓடுபாதை உள்ளது.பெங்களூருக்கு அடுத்தபடியாக கர்நாடகாவின் 2வது பெரிய விமான நிலையம் இதுவாகும்.

விமான நிலையம் தாமரை வடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இதற்காக தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் சிவமொக்கா வந்தடைந்த அவரை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வரவேற்றார்.

karnataka,new airport,prime minister modi, ,கர்நாடகா, பிரதமர் மோடி, புதிய விமான நிலையம்

அப்போது புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து ரூ.990 கோடி செலவில் சிவமொக்கா-சிகரிபுரா-ராணிபென்னூர் புதிய ரயில் பாதை மற்றும் ரூ.100 கோடியில் கோட்டாங்குரு ரயில் பெட்டி பணிமனை மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர், பைந்தூர்-ராணிபென்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சிகரிப்புராவில் புறவழிச்சாலை திட்டம் உட்பட பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். தீர்த்தஹள்ளி தாலுக்காவில் பாரதிபுராவில் புதிய பாலம் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது .

ரூ.950 கோடியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 127 கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி மற்றும் ரூ.860 கோடியில் மேலும் 3 திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 4.4 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags :