Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

By: Karunakaran Sat, 20 June 2020 2:05:34 PM

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலத்திற்கே திரும்பியுள்ளனர். இந்நிலையில், கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

pm modi,migrant workers,garib kalyan rojgar project,bihar ,கரிப் கல்யாண் ரோஜ்கார்,பிரதமர் மோடி,புலம்பெயர் தொழிலாளர், பீகார்

இந்நிலையில் பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள தெலிகர் கிராமத்தில் இந்த திட்டத்தின்கீழ் நடைபெறும் பணியை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மற்றும் இத்திட்டப் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் முதல்வர்கள், துறை சார்ந்த மந்திரிகள் கலந்து கொண்டனர்.

மொத்தம் 125 நாட்கள் நடைபெறும் இப்பணியில், 6 மாநிலங்களில் 116 மாவட்டங்களில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக 25 வெவ்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காரணமாக வேலையிழந்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Tags :