Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகனிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகனிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

By: vaithegi Mon, 03 Oct 2022 11:28:19 AM

முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகனிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

புதுடெல்லி: பிரதமர் மோடி நலம் விசாரிப்பு ... நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர், முலாயம் சிங் யாதவ் (வயது 82). சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான இவர் மத்திய ராணுவ மந்திரியாகவும் பதவி வகித்தவர். தற்போது நாடாளுமன்ற மக்களவை எம்.பி.யாக உள்ளார்.

பல்வேறு உடல்நலக்கோளாறுகளால் அவர் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி முதல் டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்.

prime minister modi,mulayam singh yadav,health inquiry ,பிரதமர் மோடி,முலாயம் சிங் யாதவ்,நலம் விசாரிப்பு

இதனையடுத்து இந்த நிலையில் நுரையீரல் தொற்றினால் அவதிப்படுகிற அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி, அவரது உயிரைக்காப்பாற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் நிதின் சூத், சுஷில் கட்டாரியா தலைமையில் டாக்டர்கள் மிக தீவிரமாக போராடி வருகிறார்கள்.

இந்தநிலையில், முலாயம் சிங்கின் உடல்நிலை பற்றி அவரது மகன் அகிலேஷிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயாராக உள்ளதாக அகிலேஷிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags :