Advertisement

இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி

By: Nagaraj Thu, 13 July 2023 11:12:28 AM

இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி

புதுடில்லி: 2 நாள் பயணமாக பிரான்ஸ் செல்கிறார்... பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டார்.

இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு பிரான்ஸ் சென்றடைவார். பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும், பிரான்ஸ் நாட்டின் பிரமுகர்கள், இந்திய சமூகத்தினர், முக்கிய நிறுவனங்களின் சிஇஓ-க்கள் ஆகியோரை சந்திக்கிறார்.

france,midnight,party,president,prime minister of india,uae ,பிரான்ஸ், நள்ளிரவு, விருந்து, அதிபர், இந்திய பிரதமர், அமீரகம்

இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு பிரான்ஸ் சென்றடையும் அவருக்கு ஓர்லி விமான நிலையத்தில் பாரம்பரிய வரவேற்பு கொடுக்கப்படும். 7.30 மணிக்கு செனட் சென்றடையும் மோடி, அதன் தலைவர் ஜெரார்டு லார்சரை சந்திக்கிறார். 8.45 மணிக்கு பிரான்ஸ் பிரதமர் எலிபெத் போர்ன்-ஐ சந்தித்து பேசுகிறார்.

அதன்பின் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றுகிறார். நள்ளிரவு பிரான்ஸ் அதிபர் அளிக்கும் தனிப்பட்ட விருந்தில் கலந்து கொள்கிறார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.

Tags :
|
|