Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரம் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது .. பிரதமர் மோடி பெருமிதம்

சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரம் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது .. பிரதமர் மோடி பெருமிதம்

By: vaithegi Fri, 25 Aug 2023 10:17:44 AM

சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரம் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது .. பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா: ஜி-20 அமைப்பின் வர்த்தக, தொழில் துறை அமைச்சர்களின் மாநாடு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டில் சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் ஆகிய லட்சியத்தின் அடிப்படையில் பயணத்தைத் தொடங்கினோம். அப்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்திலிருந்தது. கடந்த 9 ஆண்டு கால முயற்சியின் பலனாக தற்போது 5-வது இடத்தை எட்டி உள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில் 3-வது இடத்தை எட்டிப் பிடிப்போம்.

இந்திய தொழில் துறையை பொறுத்தவரை சிவப்பு நாடாவிலிருந்து சிவப்பு கம்பளத்துக்கு மாறியுள்ளோம். இதன் காரணமாக அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டம், ஜிஎஸ்டி வரி நடைமுறை, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன.

prime minister modi,economy , பிரதமர் மோடி,பொருளாதாரம்

கரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் உள்ளிட்ட சவால்களால் உலக நாடுகளின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நேரத்தில் சர்வதேச வர்த்தகம், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது ஜி- 20 நாடுகளின் பொறுப்பாகும். எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய சங்கிலி தொடரை உருவாக்க வேண்டும். சர்வதேச சவால்களை எதிர்கொள்ள பொது கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக இந்தியாவின் சார்பில் ஏற்கெனவே பரிந்துரை முன்வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்தியாவில் குறு, சிறு தொழில்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.இதன் காரணமாக வேலைவாய்ப்பு பெருகி கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. இந்தியாவின் அனுபவங்களை ஜி-20 உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளோம் என அவர் பேசினார்.


Tags :