Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டை சரியான பாதையில் பிரதமர் மோடி எடுத்துச் செல்கிறார் - குஷ்பு

நாட்டை சரியான பாதையில் பிரதமர் மோடி எடுத்துச் செல்கிறார் - குஷ்பு

By: Karunakaran Mon, 12 Oct 2020 3:31:30 PM

நாட்டை சரியான பாதையில் பிரதமர் மோடி எடுத்துச் செல்கிறார் - குஷ்பு

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக இன்று காலை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நடிகை குஷ்பு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் குஷ்பு பாஜகவில் இணைந்தார். தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற சிறப்பாக பாடுபடுவேன் என்று குஷ்பூ தெரிவித்தார்.

modi,country,right track,khushbu ,மோடி, நாடு, சரியான பாதை, குஷ்பு

பின்னர் குஷ்பு பேட்டி அளிக்கையில், பிரதமர் மோடி மாதிரியான ஒரு தலைவரால் தான் நாடு முன்னேற முடியும். நாட்டை சரியான பாதையில் பிரதமர் மோடி எடுத்துச் செல்கிறார். பிரதமர்மோடி போன்ற தலைமை நாட்டிற்கு தேவை என்பதை உணர்ந்து பாஜகவில் இணைந்துள்ளேன் என்று கூறினார்.

மேலும் அவர், பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க கடுமையாக உழைப்போம் என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பூ, பாஜகவில் இணைய உள்ளதாக சமீபத்தியில் வதந்திகள் பரவின. இதற்கு அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது -பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|