Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீகாரில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பீகாரில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

By: Karunakaran Tue, 15 Sept 2020 6:16:42 PM

பீகாரில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பீகாரின் நகர்ப்புற உள்கட்டமைப்பு குறித்த 7 திட்டங்களை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். குடிநீர் விநியோகத் திட்டங்கள், கழிவுநீர் மேலாண்மை திட்டங்கள் மற்றும் ஒரு ஆற்றுப்படுகை மேம்பாட்டு திட்டம் என மொத்தம் ரூ.541 கோடி மதிப்பில் அவை உருவாக்கப்பட்டுள்ளன. ரூ.541 கோடி மதிப்பிலான இந்த வளர்ச்சி திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

பீகார் நகர்ப்புற மேம்பாட்டு மற்றும் வீட்டு வசதித்துறையின் கீழ் செயல்படும் வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழாவில் இந்த திட்டங்களை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரும் பங்கேற்றார்.

prime minister modi,urban infrastructure projects,bihar,nithishkumar ,பிரதமர் மோடி, நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள், பீகார், நிதிஷ்குமார்

இந்த 7 வளர்ச்சி திட்டங்களில், நான்கு நீர் வழங்கல் திட்டங்கள், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில் இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் மற்றும் ஆற்றங்கரை மேம்பாட்டு திட்டம் போன்றவற்றை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், இந்திய பொறியியலாளர்கள் நாட்டின் வளர்ச்சியில் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் பீகாரில் குடிநீர், கழிவு நீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பட்டு வருகின்றன. இந்திய பொறியியலாளர்கள் நம் நாட்டைக் கட்டியெழுப்புவதிலும், உலகைக் கட்டமைப்பதிலும் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர் என்று கூறினார்.

Tags :
|