Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அயோத்தியில் ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர் மோடி

By: Karunakaran Wed, 05 Aug 2020 3:36:06 PM

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர் மோடி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்பின் ராமர் கோவில் கட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு அமைத்தது. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

இந்நிலையில் இன்று ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. கொரோனா காரணமாக முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்றன.

modi,foundation stone,ram temple,ayodhya ,மோடி, அடிக்கல் நாட்டல், ராம் கோயில், அயோத்தி

அயோத்தி வந்தடைந்த பிரதமர் மோடி முதலில் அனுமன் கார்ஹி கோவிலில் வழிபாடு செய்தார். அதன்பின், குழந்தை ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டபின் கோவில் வளாகத்தில் பாரிஜாத மலர்க்கன்றை நட்டுவித்தார். தற்போது, அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார்.

முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெறுவதால், அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அயோத்தியில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்வது இதுவே முதல் முறை.

Tags :
|