Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அருண் ஜெட்லியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் குறித்து பிரதமர் மோடி உருக்கம்

அருண் ஜெட்லியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் குறித்து பிரதமர் மோடி உருக்கம்

By: Karunakaran Mon, 24 Aug 2020 5:00:44 PM

அருண் ஜெட்லியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் குறித்து பிரதமர் மோடி உருக்கம்

முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி மரணமடைந்து ஓராண்டாகிறது. இந்நிலையில் அருண் ஜெட்லியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பலரும் தங்களது இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தமது நண்பரான அருண் ஜேட்லியை இழந்து பெரிதும் தவிப்பதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், என் நண்பனை இழந்து பெரிது தவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

prime minister modi,arun jaitley,first memorial anniversary,bjp ,பிரதமர் மோடி, அருண் ஜெட்லி, முதல் நினைவு ஆண்டு, பாஜக

அருண் ஜேட்லி இந்தியாவுக்காக விடாமுயற்சியுடன், இரவுபகலாக உழைத்தவர். அறிவுக்கூர்மை, புத்திசாலித்தனம், சட்ட வல்லுனத்துவம், அன்பான ஆளுமையுடன் திகழ்ந்தவர் ஜெட்லி என பிரதமர் மோடி அவரை புகழ்ந்து கூறியுள்ளார்.

மேலும் அவர், ஒரு முக்கிய பாஜக தலைவரும், பல தசாப்தங்களாக கட்சியின் முழு நம்பிக்கையின் ஒரு முக்கியமான உறுப்பினருமான ஜெட்லி இருந்ததாகவும், அவரது அன்பான ஆளுமையும், பழக்கவழக்கங்களும் அனைவரையும் நண்பர்களாக மாற்றியது என்று கூறினார். மோடி ஆட்சியின்போது, அருண் ஜேட்லி மத்திய நிதியமைச்சராக பணியாற்றியுள்ளார். ஒரு வழக்கறிஞர் முதல் அரசியல்வாதி மற்றும் கிரிக்கெட் நிர்வாகி வரை பொது வாழ்க்கையில் பல பணியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :