Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

By: Karunakaran Wed, 16 Dec 2020 11:16:24 AM

விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 16ம் தேதி விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி போர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.

அதன்படி, இன்று 50வது விஜய் திவாஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இன்று காலை அங்கு சென்ற பிரதமர் மோடி, மலர் வளையம் வைத்து, போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

modi,homage,national war memorial,vijay diwas day ,மோடி, மரியாதை, தேசிய போர் நினைவு, விஜய் திவாஸ் தினம்

பின்னர் அந்த வீரர்களின் நினைவு ஜோதியை ஏற்றி வைத்தார். இந்த ஜோதியானது, போரில் உயிர்நீத்த வீரர்களின் ஊர்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு நினைவு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

முன்னாள் படை வீரர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், அவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், தளவாட கண்காட்சிகள், மாநாடு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

Tags :
|
|