Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

By: Karunakaran Sat, 31 Oct 2020 11:18:35 AM

குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

இந்தியாவின் இரும்பு மனிதரான, சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்தார் படேலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றடைந்த பிரதமரை முதலமைச்சர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் வரவேற்றனர்.

modi,homage,patel statue,gujarat ,மோடி, மரியாதை, படேல் சிலை, குஜராத்

இந்நிலையில் இன்று நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்திற்கு பிரதமர் மோடி சென்றார். பின்னர், அங்கு பட்டேல் சிலைக்கு (ஒற்றுமைக்கான சிலை) மரியாதை செலுத்தினார். அங்கு தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக கெவாடியாவில் உள்ள ஏக்தா மால் என்னும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி மையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். பிரதமர் மோடி வருகையையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 23 போலீசாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|