Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் இந்திய ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடி பாராட்டு

கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் இந்திய ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடி பாராட்டு

By: Karunakaran Sun, 30 Aug 2020 4:53:25 PM

கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் இந்திய ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

இதில், பிரதமர் மோடி பேசுகையில், புதிய கல்விக்கொள்கை இந்தியாவில் பெரும் மாற்றதை ஏற்படுத்தப் போகிறது. கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் இந்திய ஆசிரியர்கள் பெரும் சவாலான பணிகளை சிறப்பாக மேற்கொள்கின்றனர் என்று பாராட்டினார்.

prime minister,modi,indian teachers,corona threat ,பிரதமர், மோடி, இந்திய ஆசிரியர்கள், கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா காலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பெரும் மாற்றத்தை உருவாக்கி உள்ளதாகவும், வெளியில் தெரியாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து ஆசிரியர்கள் மாணவர்ளுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர், தமிழக இளைஞர்களால் புதிய செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. சிறு வேலைகளில் ஈடுபடுபவர்கள் இதன்மூலம் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியும். வருகிற செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படும். மாதம் முழுவதும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஊட்டச்சத்து தொடர்பான போட்டிகள் நடத்தப்பட உள்ளதால், மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கூறினார்.

Tags :
|