Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய இந்தியாவை உருவாக்க நிதிஷ் குமார் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருப்பதாக பிரதமர் மோடி பாராட்டு

புதிய இந்தியாவை உருவாக்க நிதிஷ் குமார் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருப்பதாக பிரதமர் மோடி பாராட்டு

By: Karunakaran Sun, 13 Sept 2020 4:56:06 PM

புதிய இந்தியாவை உருவாக்க நிதிஷ் குமார் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருப்பதாக பிரதமர் மோடி பாராட்டு

பீகாரில் பெட்ரோலியத் துறையின் மூன்று திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி மூலம் துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், பைப்லைன் இணைப்பு திட்டம், எல்பிஜி கேஸ் சிலிண்டர் நிரப்பும் இரண்டு ஆலைகளை துவக்கி வைத்துபோது பேசிய போது, பீகார் முதல்வரின் பணிகளை வெகுவாகப் பாராட்டினார்.

கடந்த 15 ஆண்டுகளில் சரியான அரசாங்கம், முடிவுகள் மற்றும் கொள்கைகளுடன் பீகார் வளர்ச்சி அடைந்துள்ளது. திட்டங்கள் ஒவ்வொருவருக்கும் சென்றடைகிறது. பீகாரில் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்காக நாம் பணியாற்றி வருகிறோம். புதிய பீகார், புதிய இந்தியாவை உருவாக்கும் நமது நோக்கத்தில் நிதிஷ் குமார் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறார் என்று மோடி கூறினார்.

prime minister modi,nitish kumar,new india,bihar ,பிரதமர் மோடி, நிதீஷ் குமார், புதிய இந்தியா, பீகார்

பீகாரில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தற்போது பாஜக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன. ஆனால், நிதிஷ் குமார் முதல்வராக நீடிப்பது சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாஜகவை சேர்ந்த ஒரு பிரிவினர், மோடியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் என யோசனை கூறியும் நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை சந்திக்க மாநில பாஜக தலைமை விரும்புகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, நிதிஷ் குமாரை பாராட்டியிருப்பதன் மூலம், பீகார் தேர்தலில் நிதிஷ் குமார், பாஜக இணைந்து செயல்படுவது உறுதியாகியுள்ளது.

Tags :