Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கூடிய விரைவில் 5ஜி சேவை தொடங்கும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்

இந்தியாவில் கூடிய விரைவில் 5ஜி சேவை தொடங்கும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்

By: vaithegi Tue, 16 Aug 2022 05:55:21 AM

இந்தியாவில் கூடிய  விரைவில் 5ஜி சேவை தொடங்கும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்

இந்தியா: டெல்லி செங்கோட்டையில், தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசினார். அதில் நாம் தற்போது 5ஜி செல்போன் சேவை என்ற சகாப்தத்தை நோக்கி அடி எடுத்து வைக்கிறோம். இதற்கு மிக நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை.

கூடிய விரைவில், 5ஜி செல்போன் சேவை தொடங்கப் போகிறது. இதற்காக கிராமங்களில் கண்ணாடி இழை கேபிள் போடப்பட்டு கொண்டு வருகிறது. எனவே இதன்மூலம், கிராமங்களிலும் டிஜிட்டல் இந்தியா கனவு நனவாகிறது. கிராமங்களில் 4 லட்சம் பொது சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

prime minister modi,5g service ,பிரதமர் மோடி ,5ஜி சேவை

இதை அடுத்து அவற்றை நடத்தும் 4 லட்சம் தொழில்முனைவோர்கள் மூலமாக கிராம மக்கள் டிஜிட்டல் சேவைகளை பெறப் போகிறார்கள். டிஜிட்டல் வழியில் கல்வியிலும் முழுமையான முக்கிய புரட்சி வரப் போகிறது. சூரியசக்தி, ஹைட்ரஜன், மின்சார வாகனங்கள் உற்பத்தி என எரிசக்தி துறையிலும் இந்தியா தற்சார்பு நிலையை அடைந்து கொண்டு வருகிறது.

இதை தொடர்ந்து உலகம் முழுவதும் நடக்கும் டிஜிட்டல் பண பரிமாற்றங்களில் 40 சதவீத பரிமாற்றங்கள், இந்தியாவில் நடக்கிறது. நாம் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்த 'ஜெய் அனுசந்தஹன்' என்ற முழக்கத்தை எழுப்புவோம். ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது. அதை செய்தால், திட்டமிட்ட காலத்துக்கு முன்பே விரும்பிய பலன்களை பெறலாம் என அவர் பேசினார்.

Tags :