Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இளைஞர்கள் திறமை மற்றும் படிப்பில் சம அளவில் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம் ... பிரதமர் மோடி

இளைஞர்கள் திறமை மற்றும் படிப்பில் சம அளவில் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம் ... பிரதமர் மோடி

By: vaithegi Sat, 17 Sept 2022 6:52:25 PM

இளைஞர்கள்  திறமை மற்றும் படிப்பில் சம அளவில் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம்    ...  பிரதமர் மோடி

இந்தியா : பிரதமர் மோடி ஐ.டி.ஐ. மாணவர்களுக்கான கவுஷல் தீக்சந்த் சமோரா என்ற நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் 40 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் காணொலி காட்சி வழியே பங்கேற்றனர்.

இதனை அடுத்து இதில் பேசிய பிரதமர் மோடி, இன்று நீங்கள் கற்று கொண்டவை நிச்சயம் வருங்காலத்தில் உங்களுக்கான அடித்தளம் ஆக அமையும். ஆனால், எதிர்காலத்திற்கு ஏற்ப உங்களது திறமைகளை நீங்கள் மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

prime minister modi,youth ,பிரதமர் மோடி ,இளைஞர்கள்

அதனால், திறமை என்று வரும்போது, உங்களுடைய மந்திரம் ஆனது திறமையுடன் இருத்தல், பல தொழில்களுக்கான திறமையை கற்று கொள்ளுதல் மற்றும் உங்களது பணியில் கூடுதல் திறமைகளை வளர்த்து கொள்ளுதல் என்றிருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் எந்தவொரு பணியில் இருக்கின்றீர்கள் என்றாலும் அதில் புதுமையான விசயங்கள் என்ன நடக்கின்றன என்பது பற்றி கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்நூற்றாண்டு, இந்தியாவுக்கான நூற்றாண்டாக உருவாவதற்கு இந்திய இளைஞர்கள் திறமை மற்றும் படிப்பில் சம அளவில் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம் என அவர் கூறியுள்ளார்.

Tags :