Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலையின் சிறப்பைப் பற்றி பெருமையாக பேசிய பிரதமர் மோடி

தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலையின் சிறப்பைப் பற்றி பெருமையாக பேசிய பிரதமர் மோடி

By: Karunakaran Sun, 27 Sept 2020 1:17:27 PM

தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலையின் சிறப்பைப் பற்றி பெருமையாக பேசிய பிரதமர் மோடி

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது ஒவ்வொரு சிறப்பு மற்றும் நிகழ்வுகள் எடுத்து கூறி வருகிறார். கொரோனா, எல்லை மோதல் போன்ற முக்கிய நிகழ்வுகளையும் எடுத்து கூறி வருகிறார்.

இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில், பிரதமர் மோடி பேசுகையில், தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலையைப் பற்றி பேசினார். தமிழகத்தின் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் சிறப்பானது என்று மோடி கூறினார்.

prime minister modi,excellence,archery,tamil nadu ,பிரதமர் மோடி, சிறப்பானது, வில் பாட்டு, தமிழ்நாடு

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தைச் சேர்ந்த வித்யா என்பவர் புராணங்களை கதையாக கூறுவதை செய்து வருவதாகவும், கதை சொல்வது ஒரு அற்புதமான கலை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பஞ்சதந்திர கதைகள் போன்றவை இந்தியாவின் சிறப்பான பாரம்பரியத்தை உணர்த்துவதாகவும் கூறினார்.

இந்த ஞாயிறு பிரதமர் மோடி 69வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றியுள்ளார். இந்நிலையில் இன்று மூத்த படைவீரரும் சிறந்த பாராளுமன்றவாதியுமான ஜஸ்வந்த் சிங் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags :