Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ருவாண்டா அதிபருடன் பேச்சு

பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ருவாண்டா அதிபருடன் பேச்சு

By: Karunakaran Sat, 06 June 2020 09:44:07 AM

  பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ருவாண்டா அதிபருடன் பேச்சு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் தொலைபேசியில் உரையாடினார்.

corona virus,pm modi,rwanda,paul kagame,office of the prime minister ,கொரோனா வைரஸ்,பிரதமர் மோடி,ருவாண்டா,பால் ககாமே, பிரதமர் அலுவலகம்

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் தொலைபேசியில் உரையாடினார். கொரோனாவுக்கு எதிராக போராட இரு நாடுகளும் முழு பலத்தை வழங்க ஒப்புக்கொண்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தொடர்ந்து பல்வேறு நாட்டு தலைவர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலைபேசியில் உரையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|